காதல்

பெண்ணே,உந்தன் கார்குழல் மீது
எனக்கு பெருங் காதல் , அது நீ
என் முகத்தில் உன் முகத்தை
மெல்ல சாய்க்கும் போது , மணக்கும்
மல்லிக்கொடியாய் கூந்தல் படர ,
அதன் மீது நீ எனக்கு முகத்தில்
முத்தாய் தரும் முத்தத்தை
அது ஏந்திவரும் போது .

உந்தன் இதழ்கள்............
மயக்கும் உந்தன் தேன் சிந்தும்
இதழ்கள் மீதெனக்கு பெருங் காதலடி,
என்னென்பேன் நான் அச்செவ்விதழ்கள்
உன்னுள் பற்றிக்கொண்ட காமத்தால்
இன்னும் சிவந்து மதுவேந்தும்
செம்பருத்தி பூவாய் தோன்றுகையில்
அவ்விதழ்கள் என் உதரத்தில் சேர்ந்திடும் போது
அது தரும் இன்ப வெது வெதுப்பில்
உச்சந்தலையில் நான் அதை உணர்ந்திடும்போது
உந்தன் செவ்விதழ்கள் மீதெனக்கு காதலடி


பெண்ணே, உந்தன் அழகிய
கைகளிரண்டின் மீதெனக்கு காதலடி ,
வெண் தேக்கில், செதுக்கியதோ
அந்த வடிவு கரங்கள் , அக்கரங்களால்
என்னை நீ அணைக்கும் போது
என் மார்பை நீ தழுவும்போது, அந்த
இன்ப சுவையில் என்னையே நான்
மறக்கும்போது .............
உந்தன் கரங்களின் மீதெனக்கு காதல்.

பெண்ணே, உந்தன் விழிகளின் மீது
எனக்கு காதல் , பேசும் அந்த
காந்த கருவிழிகள் அதிலிருந்து
நீ தரும் அந்த மின்னல் வீச்சில்
எனக்கு காதலடி


இப்படி அங்கமெல்லாம் காதல் பூவாய்
பூத்துக் குலுங்கும் எந்தன்
செண்பக மரமடி நீ எனக்கு
உந்தன் காதலன் நான் , வண்டாய் வந்து
உன்னை மொய்த்திடவே சுவைத்திடவே
உன்னுள்ளே மயங்கி கிடந்திடவே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Oct-18, 6:43 am)
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே