sreebalaji - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sreebalaji |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 12-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 17 |
a fan of tamil kavithaigal
நினைவுகள் நிறைந்த நிழலோ ? நான்
நிஜம் தேடி அலைகிறேன்---தனியே
துளிர்விடும் எண்ணங்கள் தொடரவே
தூக்கம் தொலைக்கிறேன்
கடல் வானம் காற்றைப்போல
மனதில் வானிலை மாற்றமோ ?
வறுமையும் சூழ்ந்துகொள்ள
வசதியை தேடி செல்கிறேன்
அண்டம் கடந்த நாங்களோ இங்கே
அன்பில்லாத ஏழைகள்
அடிமைகள் வாழும் நாட்டிலே
அகதிகள் நாங்கள்
நேசம் கொண்ட உயிர்களோ
நெஞ்சில் நிறைந்திருக்க
வேஷமிட்டு நானும் இங்கே
வருந்திக் கொள்கிறேன்
வலிகள் கொண்டு சிலபேர் இங்கே
விதியே என்றும் சிலபேர் இங்கே
வருங்காலம் வாழ்க்கை மாறும் --என
வாழ்ந்திட பழகினேன்
தேகம் இளைத்து பொருளீட்டியும் - என்
தேடல் தீரா போவதேனோ ?
தன்ன
நெஞ்சிலே ஓர் கணம்
அது தனிமையின் ரணமா ?
கொஞ்சிப்பேசதான் ஆசை
குழந்தைத்தனமாய்
அங்குமிங்குமாய் பூக்களை கிள்ளி
சாலையில் சென்றேன்
எங்கு நோக்கினும் காணவில்லை
துணையாய் நிழல்தான்
இன்று எழுதிய கவிதைகள் கூட
காற்றில் பறக்க
என்றும் உந்தன் நிலைமை இதுதான்
பூக்களும் சிரிக்கும்
இன்று இதுவரை தேடிப்பார்த்தேன்
அவளிருப்பிடம் தெரியவில்லை
இருப்பினும் -- அந்த காதலை
என் கனவில் நான் தேடி
காத்திருப்பேன்
கடலினில் வானம் கலப்பதுபோலே
கற்பனையில் தினம் வாழ்கின்றேன் பெண்ணே
பகலில் கதிராயும் இரவில் நிலவாயும்-ஓயாமல்
உனை காதல் செய்வேன் கண்ணே
சிற்றிடை மேனியும்
சிங்கார ஆடையும்
இதலோரபுன்னகையில் இருக்கும் வெட்கம்
என் கண்களை தாண்டி எங்கே செல்லும்
சாலை முடிகின்றபோதும்
என்னை கடக்கின்றபோதும்
சட்டென்று நீ தரும் சிறுஓரப்பார்வை-என்
கவிதைகள் வாழ அதுமட்டும் போதும்
மொழிகள் தேவையா மனசுடன் பேசிட
இனியும் மௌனம் கொள்வாயோ
அருகினில் நீயும்வா அணைத்திடவே -இங்கு
தனிமையில் நானும் தனித்திருப்பேன்
துளியாய் விழுந்த காதல்
என்னை முழுதாய் நனைத்தது
சிறு இலைகளின்மேல் பனித்துளியினைபோல்
விழுந்தே உடைந்தேன்...
மொழிகள் புரியா பாடல்வரிகள்
வீசும் காற்றின் வழிதொடர
தலையையாட்டி செவிகள் சாய்த்தேன்
உந்தன் திசையில்...
தூரல்கள் தொடர்திட
தூக்கம் இங்கு தொலைந்ததடி
உன் தோள்கள் சாய்ந்தே நடந்திட
உள்ளம் ஏங்கித் துடிக்குதடி ...
காதல் வந்த தொல்லையால்
காலம் நேரம் மறக்கிறேன் -அதி
காலை உன்னை காணவில்லை
யாரை காண்பினும் வெறுக்கிறேன்
அவளை ......
தோகை கொண்ட மயிலாக
கானம் பாடும் குயிலாக
வண்ணம் கொண்ட மலராக
இருளில் ஒளிரும் நிலவாக
எண்ணி ......
கற்பனையில் என்நாட்கள் போக
கவி
காதலா அன்பு காதலா
காற்றிலே வரும் பாடலாய்
இதமாய் என் செவியருகே-உன்
இதழ்கொண்டு ஈரம் செய்வாய் ..
தூக்கங்கள் இங்கு தொலைந்ததடா -இனி
கனவுகள் காண வழிகளில்லை
காரசாரமாய் நீயும் காதல் கொள்ள
கட்டிலின் நீளம் போதவில்லை ..
உன்கைகள் என்னை களவாட
உன் இதழால் என் வாய்மூட
மெல்ல நகர்ந்திடும் நொடிதனில்
நனைந்தேன் முழுவதுமாய்
என்னாடைஇனி நீயாக
உன் மூச்சாய் நான் வாழ
என்மனதும் ஏக்கம் கொள்ளும்
இந்நாளாய் எந்நாள் மலர .....
மண் சேரும் மழையாய்
கடல் சேரும் நதியாய்
உயிர் கலக்கும் உடலாய்
என்னில் கலந்தாய் இன்று
கண்களின் இமையாய்
காற்றின் வழி இசையாய்
பின்தொடரும் நிழலாய்
துணை நிற்பேன்