துளியாய் விழுந்த காதல்
துளியாய் விழுந்த காதல்
என்னை முழுதாய் நனைத்தது
சிறு இலைகளின்மேல் பனித்துளியினைபோல்
விழுந்தே உடைந்தேன்...
மொழிகள் புரியா பாடல்வரிகள்
வீசும் காற்றின் வழிதொடர
தலையையாட்டி செவிகள் சாய்த்தேன்
உந்தன் திசையில்...
தூரல்கள் தொடர்திட
தூக்கம் இங்கு தொலைந்ததடி
உன் தோள்கள் சாய்ந்தே நடந்திட
உள்ளம் ஏங்கித் துடிக்குதடி ...
காதல் வந்த தொல்லையால்
காலம் நேரம் மறக்கிறேன் -அதி
காலை உன்னை காணவில்லை
யாரை காண்பினும் வெறுக்கிறேன்
அவளை ......
தோகை கொண்ட மயிலாக
கானம் பாடும் குயிலாக
வண்ணம் கொண்ட மலராக
இருளில் ஒளிரும் நிலவாக
எண்ணி ......
கற்பனையில் என்நாட்கள் போக
கவிதைகளில் என்காதல் வாழ
காற்றோடு உரையாடி கொண்டேன்
கனவிலே உன்முகம் தேடியலைந்தேன் ....
பின்தொடரும் எண்ணங்கள் இல்லை - உன்
உடன்வரத்தான் ஆசைகள் கொண்டேன்
கண்மூடி நான்சாயும் நேரம்தனிலும்-உன்
கண்கள் காண ஆசைகொள்வேன்..............