காதலா அன்பு காதலா
காதலா அன்பு காதலா
காற்றிலே வரும் பாடலாய்
இதமாய் என் செவியருகே-உன்
இதழ்கொண்டு ஈரம் செய்வாய் ..
தூக்கங்கள் இங்கு தொலைந்ததடா -இனி
கனவுகள் காண வழிகளில்லை
காரசாரமாய் நீயும் காதல் கொள்ள
கட்டிலின் நீளம் போதவில்லை ..
உன்கைகள் என்னை களவாட
உன் இதழால் என் வாய்மூட
மெல்ல நகர்ந்திடும் நொடிதனில்
நனைந்தேன் முழுவதுமாய்
என்னாடைஇனி நீயாக
உன் மூச்சாய் நான் வாழ
என்மனதும் ஏக்கம் கொள்ளும்
இந்நாளாய் எந்நாள் மலர .....
மண் சேரும் மழையாய்
கடல் சேரும் நதியாய்
உயிர் கலக்கும் உடலாய்
என்னில் கலந்தாய் இன்று
கண்களின் இமையாய்
காற்றின் வழி இசையாய்
பின்தொடரும் நிழலாய்
துணை நிற்பேன் என்றும் ......
காதலா அன்பு காதலா ....!!!