ஒரு சொட்டு சுவாசம்
அழுத்தங்கள் என்னை விரட்டுகிறது
அப்போது யாரோ என்னை
அழைப்பதாய் உணர்கிறேன்,
திரும்பிப்பார்க்க முயல்கிறேன்,
.........
தாயின் பாதி உயிரை
கொண்டு சென்று புதைத்த
இயற்க்கையின் அசைவுகள் எனதருகே!!
இழப்பின் மிச்சங்களில் எஞ்சிருப்பது
ஒரு சொட்டு சுவாசம் மட்டுமே என்னோடு,
அதற்காகவும்,,,
பூமி பிழந்து கல்லறையகிப்போனது
என் முன்னே.