தனிமையில் நானும் தனித்திருப்பேன்

கடலினில் வானம் கலப்பதுபோலே
கற்பனையில் தினம் வாழ்கின்றேன் பெண்ணே
பகலில் கதிராயும் இரவில் நிலவாயும்-ஓயாமல்
உனை காதல் செய்வேன் கண்ணே

சிற்றிடை மேனியும்
சிங்கார ஆடையும்
இதலோரபுன்னகையில் இருக்கும் வெட்கம்
என் கண்களை தாண்டி எங்கே செல்லும்
சாலை முடிகின்றபோதும்
என்னை கடக்கின்றபோதும்
சட்டென்று நீ தரும் சிறுஓரப்பார்வை-என்
கவிதைகள் வாழ அதுமட்டும் போதும்

மொழிகள் தேவையா மனசுடன் பேசிட
இனியும் மௌனம் கொள்வாயோ
அருகினில் நீயும்வா அணைத்திடவே -இங்கு
தனிமையில் நானும் தனித்திருப்பேன்

எழுதியவர் : ஸ்ரீ பாலாஜி (12-Mar-16, 4:28 pm)
சேர்த்தது : sreebalaji
பார்வை : 390

மேலே