விரும்புகிறேன்
நிலவு தூரம் செல்லாமல்
என் அருகே வந்தாய்
நீண்ட நேரம்
காத்திராமல் மென்மையாய்
பேசினாய்
வெண்மையான உனதுள்ளம்
மெருகுபட்ட
தாமரை
உன்பேச்சால்
எனதுள்ளம் உன்னோடு வந்தாலும்
திருப்பிவிடு
ஏனென்றால்
உன் உண்மை என்னிடத்தில்
இல்லை
மறைக்க விரும்பவில்லை
உன்னை விரும்புகிறேன்