யார் அவள்
நெஞ்சிலே ஓர் கணம்
அது தனிமையின் ரணமா ?
கொஞ்சிப்பேசதான் ஆசை
குழந்தைத்தனமாய்
அங்குமிங்குமாய் பூக்களை கிள்ளி
சாலையில் சென்றேன்
எங்கு நோக்கினும் காணவில்லை
துணையாய் நிழல்தான்
இன்று எழுதிய கவிதைகள் கூட
காற்றில் பறக்க
என்றும் உந்தன் நிலைமை இதுதான்
பூக்களும் சிரிக்கும்
இன்று இதுவரை தேடிப்பார்த்தேன்
அவளிருப்பிடம் தெரியவில்லை
இருப்பினும் -- அந்த காதலை
என் கனவில் நான் தேடி
காத்திருப்பேன்