தமிழ்த் தேன்
தமிழ்த் தேன்
*******************************************
உரக்கவே பாடிய என்னினும் உள்ளம்
இறக்கவே பாடி உயிர் ஈர்த்தார் தம்மை
மறக்கவே ஆமோ ? மறையுலக வாசல்
திறக்குமே தேன்தமிழ் மொழிவார்க்கே !
(உள்ளம் இறக்கவே பாடி உயிர் ஈர்த்தார் தம்மை = புவியார்ந்த பாமரர்களையும் ஈர்த்த பாடல்களைத்
தந்த ஆழ்வார்களையும் சைவ சமய நால்வரையும் குறிக்கிறது )

