வேண்டும்

மீண்டும் நீ வேண்டும்!
மிதமாய் உன் இதம் வேண்டும்!

சீண்டும் உன் விரல் வேண்டும்!
சிணுங்கும் உன் குரல் வேண்டும்!

சிரிக்கும் உன் இதழ் வேண்டும்!
எனை நிரப்ப உன் நிழல் வேண்டும்!

உனைத் தீண்டும் ஒரு வரம் வேண்டும்!
எனைத் திருட நீ வர வேண்டும்!
 
வருடும் உன் கரம் வேண்டும்!
உன் வளையல் ஒலி தினம் வேண்டும்!
 
வழியும் உன் எழில் வேண்டும்!
என் விழியில் உன் விழி வேண்டும்!

அலையும் உன் குழல் வேண்டும்!
அதனுள்ளே நான் விழ வேண்டும்!

குழையும் உன் மொழி வேண்டும்!
நீ குளித்த ஒரு துளி வேண்டும்!

உன் இதயம் அதில் இடம் வேண்டும்!
நான் இறக்க உன் மடி வேண்டும்!

 - நிலவை.பார்த்திபன்

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (26-Oct-18, 4:03 am)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 54

மேலே