என் தாய்க்கும் தந்தைக்கும் ஆயிரம் நன்றி
என் இனிய தோழியே!
நான் சிறு குழந்தையாய் இருந்த பொழுது
என்னிடம் லேப்டாப் இல்லை, பிளாக்பெர்ரியும் இல்லை,
ஐ பாட், PS3, ஐ போன் என்று எதுவுமில்லை;
நண்பர்களுடன் நான் தெருவில் விளையாடுவேன்,
முழங்கால்களில் சிராய்த்துக் கொண்டும்,
கதைகள் பேசியும், கண்ணாமூச்சி விளையாடியும்
பொழுதை நாங்கள் கழிப்போம்.
தாயார் தரும் எளிய உணவை நான் சாப்பிடுவேன்,
பெற்றோர் சொல் பேச்சைத் தட்டி 'முடியாது'
என்று சொல்ல யோசிப்பேன் பலமுறை!
எனக்காக, அம்மா, நீ செய்த தியாகங்கள் ஏராளம்!
வாழ்க்கை அன்று அப்படி ஒன்றும் மோசமில்லை!
நன்றாகவே இருந்தது, நான் பிழைத்துக் கொண்டேன்;
நான் இன்றிருக்கும் நிலைக்கு என்னை உயர்த்திய
என் தாய்க்கும் தந்தைக்கும் ஆயிரம் நன்றி!