நீ இல்லா உலகில்

நீ இல்லா உலகில் . . .

நான் யாரிடம் கவி பயில

சந்தத்திற்குள் சங்கதியை
சரம் கோர்க்கும் வித்தையை
யாரிடம் கற்று கொள்ள

எதுகை மோனையை
இடம் மாற்றி பொருள் மாற்றி
பொருளீட்டும் வித்தையை
எங்ஙனம் கற்று தெளிய

எண்பது அகவையிலும்
இளைமையாய் வாழ்ந்து முடித்த
அந்த செப்படி வித்தையை
நான் எப்படி
கற்று தெளிய

வாழும் வரை.மானுடத்திற்கும்
வாழ்ந்து களைத்த பின்
இன்று கடவுளின் மெட்டுக்கும்
ஓயாமல் பாட்டெழுதும்
வித்தையை சொல்லி
கொடுக்குமுன்

அவசரமாய் பூமியில் இருந்து
சொர்க்கம் சென்ற என் குருவே

நிம்மதியாய் கண்ணுறங்கு
நானும் என் வாழ்வு முடித்து
வந்து உன் இடம் சேர்ந்தபின்
கற்று முடிக்கிறேன்
நீ சொல்லி கொடுக்க மறந்த
மொத்த வித்தையும்

நீ பிறந்த இந்நாளில்
உன் நினைவோடு வெளிவரும்
கண்ணீரோடு
வாழ்த்த வயதின்றி
வணக்கத்தை காணிக்கையாக்குகிறேன்
ஏற்று கொள்ளுங்கள் என் குருவே

எழுதியவர் : ந.சத்யா (29-Oct-18, 12:11 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : nee illaa ulagil
பார்வை : 202

மேலே