இள மச்சே இதக் கேளடா

##கொச்சைத் #தமிழில்
#கிராமத்துக் #கவிதை
#இருக்க. #வேண்டுமாம் 😊

#முயற்சி #பண்ணி #உள்ளேன்
#தவறை #சுட்டிக் #காட்டுங்கள்
#என் #அருமை #வாசகர்களே 🙏


ராத்திரி நடு சாமத்திலே
தூக்கம் எல்லாம் கலைஞ்சிரிச்சி/
கோபமா போனவ மூஞ்சி
கனவுல வந்திருச்சி மச்சி /

ஏங் கதயே ஓடுற தண்ணில மீன்
புடிக்க தூண்டி போட்ட கதயாச்சி/
வூட்டுல ஒண்ணுமே இல்ல
உடுத்துக்க நல்ல துணிமணி இல்ல /

காச்சு மூச்சு என்னு கத்திட்டு
கோபிச்சிக்கிட்டு போனா அந்தப் புள்ள /
மாஞ்சி மாஞ்சி ஒழச்சும்
சேத்திக்கிட்டது ஏதுமேயில்ல/
கூடிக்கிட்டே போச்சி
கட்டிக்கிட்டவ தொல்ல/

சந்தைப் பக்கம் போனா
கண்ண மூடிக்கிட்டே அள்ளுவா /
கிட்டப் போய் ஏதாச்சும் சொன்னா /
கண்ணக் கசக்கிக்கிட்டு நிப்பா/

கையில நாளு காசு சேக்காம/
கண்ணானம் வேணான்னா/
ஆத்தா என்ன வுட்டிக்கிச்சா /
கண்ணை மூடுறத்துக்குள்ள
கட்டிக்கோ என்னு கத்திக்கிச்சே/

வெதச்ச நெல்லும் போச்சே/
வெத நெல்லு வாங்க
வச்ச நகையும் போச்சி /
வட்டி குட்டி எல்லாம் கட்டி /
கையையும் சுரண்டிடிச்சி /
பொட்டி சட்டி பானை எல்லாம்
சேந்தவை முடிஞ்சிபோச்சி/

காதுல கழுத்துல மூக்குல காழி /
இத்துக்குள்ள இன்னா தீவாளி /
என்னு மூச்சியை தூக்கிக்கிட்டா /
நானும் இன்னா பண்ணுவேனாக்கும் /

காரசாரமாய் திட்டிப் புட்டேன் /
புசுக்கென்று புட்டியைக் கட்டிக்கிட்டு
சொல்லாமக் கொள்ளாம அவ
ஆத்தா வூட்டுக்கு போய்த்தா மச்சே

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Oct-18, 5:33 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 48

மேலே