ஆண் அழகு

என்னிடம் சண்டையிடும் - உன்
ஆண்கர்வம் கூட அழகு !!!!!
என் புன்னகைக்காக - உன்
பொய்கள் கூட அழகு!!!!
என் கண்ணீர்க்கு - உன்
முத்தமும் அழகு!!!
கவலை கலைந்திடும் - உன்
புன்னகை கூட அழகு!!!!!
ஊடல் பொழுதில் - உன்
கெஞ்சல் கூட அழகு !!!!
கூடல் பொழுதில் -உன்
ஸ்பரிசமும் அழகு!!!
என்னை மிரட்டும் - உன்
கோபங்கள் கூட அழகு!!!
என்னை சிறையெடுக்கும் - உன்
விழிகள் கூட அழகு!!!!!
என்னை தீண்டும் -உன்
நரை மீசையும் அழகு!!!
குழந்தையாய் மடியில் சாயும்
என்னவனும் அழகு!!!!