காத்திருக்கிறார்கள்
யாருக்கு யாரென்று
எழுதியவன்
ஊருக்குப் போய்விட்டான்,
விடுமுறையில்..
அதனால்
பெற்றோர் அலைகிறார்கள்
பெண்ணுக்கு வரன்தேடி..
தட்சணைத் தடைகள்
கட்டுப்படியாகாததால்
விட்டுவிட்டார்கள் தேடுவதை-
தற்காலிகமாக..
காத்திருக்கிறார்கள் அவர்கள்,
விடுமுறையில் சென்றவன்
வீடு திரும்பட்டுமென்று...!