காதல் மழை
மேகம் கூடினாலும் அவள்
என்னை தேடினாலும்
மழை உறுதி..!
மண்ணிலும் என்னிலும்
மண்ணுக்கு முத்து முத்தான மழை
எனக்கு முத்த முத்தமான மழை..!
விழுதென விழும் மழையோ விலக்கிட முயலுமே நம்மை
விதி வந்தென்ன விலக்கினாலும்
விலகிடமாட்டோம் இது உண்மை..!
உன் உதட்டில் ரோகை உள்ளது என்பதை,
என் உதட்டால் ஊர்ந்து உணர்ந்தேன்.
முதல் முத்தத்திலே நான் மெல்ல
மெல்ல உயிரோடு கரைந்தேன்..!