ஓய்வின் நகைச்சுவை 36 எங்கும் எதிலும் ஹலோ

(2 வீலரிலே ..பின்னாலிருக்கும் மனைவியின் மொபைல் ஒலிக்கிறது

மனைவி : ஹலோ……..
கணவன்: (ஏதோ ஞாபகத்தில் தலையை சாய்த்தவண்ணம் ) ஹலோ..ஹலோ சரியாகேட்கலே
மனைவி : ஹலோ……….. ஹலோ……………
கணவன்: ஏண்டி நீதானா! ஒரே டிராபிக் சத்தம். வீட்டுக்குத்தான் வந்துண்டிருக்கேன். ஆமாம் சாப்பிட்டாச்சு வந்து பேசிக்கிறேன்.(தனக்குள்) எப்போ பார்த்தாலும் எங்கிருக்கே எங்கிருக்கேனு!!……………..
மனைவி: (லேசாக முதுகை தட்டி) ஆமா என்ன நடக்கிறது??????
கணவன்: நீ எப்போ….. எப்படி ? சாரி நீ பின்னாடி இருக்கிறதே மறந்துடிச்சு?
மனைவி: நிறுத்துங்கோ நிறுத்துங்கோ அய்யோ போலீஸ் (நாளை )

(இறைவன் போல் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
இன்றைய மொபைல் இரா வில் அதிகம் உபயோகிக்கும் வாக்கியம்
1. நீங்க இப்போ எங்கே இஇருக்கீங்க ?
2. ஏ யதாவது சாப்பிட்டீங்களா ஏ
தவறாக உபயோகிக்கும் சொல்
3. இப்போ வீட்டுக்குத்தான் வந்துகொண்டிருக்கேன் )

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (1-Nov-18, 6:39 am)
பார்வை : 63

மேலே