அகதியின் சிறை

இரவின் போர்வையில்
எவ்வித அரவமுமின்றி
பிறந்தது இளம் ரோஜா
--------------
அன்று மாலை தென்றல் வந்தது
அவன் அம்மலரின் மணவாளன்
காதில் என்ன சொன்னானோ
ரோஜா மகிழ்ந்தது
இதழ் விரித்தது
கலகல வென சிரித்தது
மௌனம் கலைந்தது
----------------
சூழ்ந்திருந்த முட்களையும் மீறி
தொலைந்து விட்டிருந்தது ரோஜா
தெளிவாகச் சொன்னால் கடத்தல்
---------------
வெட்டுண்ட வலியோடு கதறியது
இங்கே தன்போல் பலர் உள்ளனர்
ஒருவன் அவர்களை நெருங்கி கயிற்றினால் பிணைத்தான்
_______________
கூட்டமாக கடத்திச் சென்றனர்
ரோஜாக்கள் நடுங்கின
ஒன்றையொன்று கட்டிக்கொண்டு
அழுது புலம்பின
_______________
ஓரிடத்தில் அவற்றை கிடத்தி
ஒழுங்குபடுத்தி வைத்தார்கள்
அங்கே கல்லறை என்றிருந்தது
ரோஜா மீண்டும் சிரித்தது
என்னவென்று மற்றவை கேட்க
இது ஓர் அகதியின் சிறை
அவன் மீண்டுவிட்டான்
நாம் இங்கே மாளப் போகிறோம்
என்று சொல்லி விட்டு வாடியது
பிறகு ஓசையின்றி கேட்டது....
அந்த ரோஜாவின் மரண ஓலம்

எழுதியவர் : ரதி (2-Nov-18, 8:46 am)
சேர்த்தது : ரதி
Tanglish : agathiyin sirai
பார்வை : 1760

மேலே