மாற்றிமாற்றி கண்ணசைக்காதே
கீற்றோடு ஆடி உறவாடும் பூந்தென்றல்
ஆற்றோடு பாய்ந்துதான் ஓடியே வந்திடும்
நாற்றோடு ஓடாமல் நின்றிடும் நன்னிலநீர்
காற்றோடு ஆடி வரப்பில் நடப்பவளே
சேற்றில் இறங்கி குழைமிதிக்கக் கூடாதோ
சோற்றுக்கு என்னவழி என்றுதெரி யாதவளே
மாற்றிமாற்றி கண்ணசைக்கா தே !
----- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா