அண்டத்தை அலங்கரிக்க வா
வெண்மேகத்தை திரியாக்கி வெண்ணிலாவில் விளக்கேற்ற...........வா!
விண்மீன் கொண்டு வான்முழுவதும் விளக்கேற்ற........வா!
கடல் நீரை நெய்யாக்கி அதில் திரளும் அலைகளைத் திரட்டி திரியாக்கி
கதிரவனின் கதிர்களை கடன் வாங்கி அணையாதீபம் ஒன்று ஏற்ற..........வா!
வானவில்லில் அம்புதொடுத்து வானெங்கும் வண்ணங்களால் நிரப்ப........வா!
முல்லைக் கொடியை படரவிட்டு வானவில்லை மறையாமல் கட்டிவைக்க.........வா!
செங்காந்தள் மலர் கொடியால் ஆகாயத்தில் பந்தலிட்டு ஓசோன் ஓட்டையை அடைக்க.....வா!
நட்சத்திரங்களால் புள்ளிவைத்து கோள்கள் கொண்டு கோலம் போட.....வா!
பாரெங்கும் பசுமையைப் போர்த்த.........வா!
பூவுலகுயெங்கும் பல வண்ணப்பூக்களை பூக்க வைக்க.......வா!
பூமியெங்கும் வண்ணத்துப்பூச்சியைக் கொண்டு வர்ணஜாலமிட........வா!
பூத்துகுலுங்கும் மரங்களையெல்லாம் பனித்துளியால் அலங்கரிக்க.......வா!
தரணியில் உள்ள தாவரங்களையெல்லாம் விண்மீனுக்குப் போட்டியாக
மின்மினி கொண்டு அலங்கரிக்க........வா!
தென்றலை அழைத்து தென்னையோலையில் யாழ் மீட்ட............வா!
கிறிஸ்து,முஸ்லீம்,இந்து பல தெய்வங்களை ஒன்றாக்கி
ஒற்றை உருவம் கொடுக்க..........வா!
அதற்குக் கடவுள் என்று ஒற்றைப் பெயர் வைக்க.......வா!
புவியெங்கும் புன்னகை பூக்களால் பூரிக்க வைக்க..........வா!
அண்டம் முழுதும் அன்பென்ற அகல்விளக்கை ஏற்றி
அகிலத்தை அன்பால் அழகாக்க...................வா!
இயற்கையையும்,இசையையும் இணைய வைத்து
மானிட மனதை மகிழ்ச்சியால் அலங்கரிக்க..............வா!