ரதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரதி |
இடம் | : |
பிறந்த தேதி | : 20-Sep-2000 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 155 |
புள்ளி | : 4 |
பாரதியின் ரசிகை
காதல் என்பது என்ன..
கண்ணில் பட்ட அனைவரிடமும்
கேட்டேன்.... கோடி பதில்கள் குவிந்தன
'இன்பமிக்க இனிய பயணம்'
இளம்ஜோடிகள் இயம்பின -
எங்கே இது முடியும் என்றேன்
எதிர்காலம் யாமறியோம் என்றனர்
'உயிரைக் கொல்லுகின்ற நோய்'
உடையவளை தொலைத்தவன் இவன்
மீட்கும் மருந்தும் அதுவே தானோ?
மீண்டவன் மகிழ்ந்துரைத்தான்
கைவளை கழன்று விழ தலைவி
கண்ணீரும் கம்பளையுமாக கரைந்து
பசலையில் நொந்து வாடினாளாம்
பழங்கதை பகர்ந்தாள் சங்கத்து பைங்கிளி
இயற்கையின் தேவை என்றான் அறிஞன்
தீர்ந்த பின் இனிக்குமா? என்றேன்
தேடிய நூல்களில் இல்லை என்றான்
கடவுள் என்றனர் அநேகம் பேர்
கற்பனை என்றனர் ஒரு சிலர்
கனவு என்றனர் அறிய
இரவின் போர்வையில்
எவ்வித அரவமுமின்றி
பிறந்தது இளம் ரோஜா
--------------
அன்று மாலை தென்றல் வந்தது
அவன் அம்மலரின் மணவாளன்
காதில் என்ன சொன்னானோ
ரோஜா மகிழ்ந்தது
இதழ் விரித்தது
கலகல வென சிரித்தது
மௌனம் கலைந்தது
----------------
சூழ்ந்திருந்த முட்களையும் மீறி
தொலைந்து விட்டிருந்தது ரோஜா
தெளிவாகச் சொன்னால் கடத்தல்
---------------
வெட்டுண்ட வலியோடு கதறியது
இங்கே தன்போல் பலர் உள்ளனர்
ஒருவன் அவர்களை நெருங்கி கயிற்றினால் பிணைத்தான்
_______________
கூட்டமாக கடத்திச் சென்றனர்
ரோஜாக்கள் நடுங்கின
ஒன்றையொன்று கட்டிக்கொண்டு
அழுது புலம்பின
_______________
ஓரிடத்தில் அவற்றை கிடத்தி
ஒ
நள்ளிரவு ஒன்றில் விழித்துக் கொண்டிருந்தேன்..
கள்ளத்தனம் செய்து கொண்டிருந்த நிலவை ரசிக்க
வெள்ளை நிலவு அன்று தங்க நகை சூடி இருந்தது - அதன்
உள்ளத்தைக் கவர்ந்த மன்னன் வருகிறான் போலும்
நானும் யாரென்று ஆவலோடு காத்திருக்க
காற்றடித்து சட்டென மூடிக் கொண்டது என் ஜன்னல் கதவுகள்
மதியே... உனக்கு மதி கொஞ்சம் அதிகம் தான்..
நதியோர மரத்திலிருந்து விடைபெற்றன சருகுகள்
மதிவானில் தன் காதல் மேகங்களை தேடிய ஆழிக்கு
பதியை பிரிந்து பாலையில் வீழ்ந்த மழை துளி தன்
விதி இதுவென காற்றில் எழுதி கரை(மறை)ந்தது
உதிர்சருகுகளில் ஓலை கொடுத்தனுப்பியது காற்று
பதில் வரும் வரை நிலைத்திருக்குமா உயிர்துளி