பிரிவு
நதியோர மரத்திலிருந்து விடைபெற்றன சருகுகள்
மதிவானில் தன் காதல் மேகங்களை தேடிய ஆழிக்கு
பதியை பிரிந்து பாலையில் வீழ்ந்த மழை துளி தன்
விதி இதுவென காற்றில் எழுதி கரை(மறை)ந்தது
உதிர்சருகுகளில் ஓலை கொடுத்தனுப்பியது காற்று
பதில் வரும் வரை நிலைத்திருக்குமா உயிர்துளி