மழை தேவைத்தானோ
நிறைந்து இருந்த நதிகள்
இன்று வறண்டு இருப்பது ஏனோ
அணைகள் நீரை அடைத்து கொள்ள
அணையை அடைத்தவனே இன்றும் வெல்ல
இது தொடர்ந்தால்
தண்ணீருக்கு மக்கள் எங்கே செல்ல
நெற்கதிரை மட்டும் பார்த்து பழகிய வயல்கள்
இன்று வேலையின்றி வெறும் மண்ணாக இருப்பது ஏனோ
பாதி விவசாயி இறந்து போக
மீதி பேர் விவசாயத்தை மறந்தும் போக
இது தொடர்ந்தால்
சோற்றுக்கு மக்கள் எங்கே போக
அனைவருக்கும் அள்ளி கொடுத்தவன்
அரைவயிற்றுடன் அலைகிறான்
களைப்பின்றி காலை எடுத்தவன்
பிறர் கையை நாடி திரிகிறான்
இதை கண்டும் பலர்
நமக்கென்ன என்று இருக்கிறான்
மழை பொழிந்தும் ஏரிகுளம் நிறைந்தும்
நீரை சேமிக்க நாம் ஏன் மறந்தோம்
விலை நிலங்கள் பல கட்டிடம் ஆயாச்சு
வயலில் விளையும் பொருட்களில் கலப்படம் வந்தாச்சு
வீட்டில் விழும் மழைநீரும் கலவை தேடி போகுது
இதை எல்லாம் சேரி செய்ய நமக்கு என நேரமா இருக்குது..?