தீபாவளி

தீபத் திருநாளை
தீபாவளி பெருநாளை
வரவேற்போம் - வாங்க
அனைவரும் சேர்ந்து
கொண்டாடி மகிழ்வோம்
ஒற்றுமையாக!

அதிகாலையில் எழுந்து
எண்ணெய் தேய்த்து குளிச்சு
புத்தாடை அணிந்து
முதியோர் காலில் விழுந்து
ஆசி பெறுவோம்
சாதி மதம் மறந்து...!

தித்திக்கும் பலகாரம்
நிறைய சமைத்து
உற்றார் உறவினருக்கு
எடுத்துக் கொடுத்து
மகிழ்ச்சி பொங்க 
மத்தாப்பு வெடித்து
இருளை விரட்டுவோம்
அகல் விளக்கை வைத்து

கோபத்தை துறந்து
அகங்காரத்தை விரட்டி
தீமையை கொழுத்தி
பொறாமையை அழித்து
ஆனந்தம் பாடுவோம்
அன்பை விதைத்து
இனிமையாய் வாழுவோம்
மனிதத்தை இணைத்து!

தீப ஒளித் திருநாளை
கொண்டாடி மகிழ்வோம்
பாதுகாப்பாக...
வெடி பல வெடித்து!

இவண்
கிச்சாபாரதி

எழுதியவர் : கிச்சாபாரதி (5-Nov-18, 10:52 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : theebavali
பார்வை : 92
மேலே