தீபாவளி

உயிர்ச் சொந்தங்கள், உறவுகள் ,எழுத்தின் நட்புகள்,
முகாமைத்துவ நட்புள்ளங்கள் யாவருக்கும்
நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்
====================================================
தீபாவளி
=========
இல்லத்தில் என்றென்றும் இன்ப ஒளிவீச
நல்லெண்ண மென்கின்ற நெய்யூற்றி - அல்லல்
விலகவே அன்பு விளக்கேற்று. வாழ்வில்
விலகாது தீபா வளி
**
இல்லா தவர்க்கு இருப்பதைக் கொண்டுதவப்
பொல்லா மனம்பூட்டிப் போட்டுந்தன் – வல்லமையைக்
காட்டு, வசந்தத்தைக் கையேந்தி வந்துனக்கு
நீட்டுமே தீபா வளி.
**
என்றோ அழிந்த அசுரன் மறுபடியும்
நன்றா யெழுந்துவந்து நாடாளு – மன்றத்துள்
சென்று அரசாளும் சீரழி வில்லையேல்
என்றுமிங்கு தீபா வளி
**மெய்யன் நடராஜ்