வரிசையில் நையாண்டி மேளம் 2
வாட்ஸ்அப்பில்
தாய்மையைப் போற்றி விட்டு ;
முகனூலில்
யாவரையும் வாழ்த்திவிட்டு ;
நண்பருடன் கைபேசியில்
ஆரவாரமாய் சிரித்து விட்டு ;
என் அறைக்குப் புறப்பட்டேன்
நல்ல வேளை
ஞாபகம் வந்தது
பக்கத்தறையில் வயதான
தாய் காத்திருப்பில் ;
பேசி விட்டேன் -
அம்மா சாப்பிட்டீங்களா
அம்மா தூங்கலையா ?
********