நாட்குறிப்பு எழுதிய நாட்கள்

கவிதை மணி: நன்றி
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:
""நாட்குறிப்பு எழுதிய நாட்கள் ""
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்" எழுதிய கவிதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது லாப நஷ்ட நோக்க குறிப்பன்று
என் எதிரியை எதிர்க்க இயலாதது
என் சாந்த குணமா கோழை தனமா
சொல்லத் தெரியவில்லை ஆனாலும்
எதிரியை வெட்டி பொட்டு வைத்தால்
ஒழிய கோபம் தீராது மனது ஆறாது
என்றே நாட்குறிப்பு எழுதிய நாட்கள்
நினைவில் நிழலாடும் பொழுதில்
தேவா இதற்கொரு விமோசனம் பகறு
எம்மால் முடியாதது உம்மால் முடியும்
இறுதியில் இறைவனை சரணடைந்திட
காலையில் காலில் விழுந்தான் எதிரி
நெஞ்சிக்குள் மண்டி கிடந்திட்ட தீரா
கோபம் என்கின்ற பாரம் லேசாகிற்று
கொலைகாரன் நாமம் விலக்கிற்று
சிறைவாசல் படியேறும் படியில்லை
••••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான் " மும்பை