இறைவணக்கம்

ஒரு குளம்.பல் வேறு படித்துறைகள். அதில் ஒன்றில் இறங்கியவர் குளத்தில் இருக்கும் நீரைப் பார்த்து தண்ணீர் என்கிறார். இன்னொரு படித்துறையில் இறங்கியவர் ஜலம் என்கிறார். இன்னொருவர் water என்கிறார். இன்னொருவரோ பானி என்கிறார்.

அனைவரும் குறிப்பிடுவது ஒரே நீரையே. அவரவர் உணர்ந்த படி சொல்கிறார்.

அதே போலவே இறைவன் ஒருவனே. அவரவர் உணர்ந்தபடி அவனைப் போற்றி வணங்குகின்றனர்.

ஆகாயத்திலிருந்து விழுகின்ற மழைத் துளிகள் எப்படி சமுத்திரத்தைச் சென்று அடைகிறதோ அது போலவே எல்லா கடவுள்களுக்கும் செய்யும் இறைவணக்கம் தெய்வங்களை சென்று அடைகிறது.

நாகராஜன்

எழுதியவர் : (10-Nov-18, 6:17 am)
Tanglish : iraivanakkam
பார்வை : 85

மேலே