வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற சமுதாயத்தினருக்கான பயிற்சிப் பட்டறை வரும் திசம்பர் மாதம், 6-9, 2018
வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற சமுதாயத்தினருக்கான பயிற்சிப் பட்டறை வரும் திசம்பர் மாதம், 6-9, 2018 நடைபெற இருக்கிறது. இதில் 20 தமிழ் விக்கிப்பீடியர்கள் சிறப்புப் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ள பஞ்சாபி மொழி விக்கிப்பீடியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்த திட்டமீட்டை இங்கு மேற்கொள்ளலாம்.
பயிற்சி இடம் மற்றும் வெளியூர்களில் இருந்து வருவோருக்கான தங்குமிடம் பின்வருமாறு:
பார்க் இன் பை ரடிசன்
விமான நிலையம் எதிரில்,
ரடிசன் பிளூவுடன் ஒட்டி,
மாநில நெடுஞ்சாலை, அஜ்னலா சாலை,
பால் சந்தர்
அமிர்தசரஸ்
பஞ்சாப் - ௧௪௩௦௦௧
பயிற்சியில் பங்கு பெறுபவர்கள் ஓரறைக்கு இரண்டு பேர் என்று பகிர்ந்து கொள்ளுவது போல் அமையும்.
பங்கு பெற விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இடலாம். நவம்பர் 8 இரவு 11.59 (இந்திய நேரப்படி) வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின் விண்ணப்பித்தால் தேர்வு செய்யப்படலாம்; படாமலும் போகலாம். (தேர்வுக்குழு முடிவின் அடிப்படையில்). உணவு, தங்குமிடம், பயணச் செலவுகளைத் திட்டச் செயல்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
பங்கு பெறுவோருக்கான தகுதிகளாகப் பின்வருவன அமையட்டும் என்று பரிந்துரைக்கிறேன். உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.
குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள்
பெண்களுக்கு முன்னுரிமை
வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னுரிமை.
இலங்கையில் இருந்து அதிகபட்சம் மூன்று பேர் வரை பயணத்திற்கு ஏற்பாடு செய்யமுடியும்.
மேலே கூறப்பட்ட விதிகளின் படி குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள்(விக்கமூலத்தில் பக்கவெளியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பக்கவெளியில் மெய்ப்பு வேலைகள் நடக்கும் இடம்) , பெண்களுக்கு முன்னுரிமை, வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னுரிமை, நீண்ட நாட்களாக தொடர்ந்து பங்களித்தமை, அண்மை கால பங்களிப்புகள், தொகுப்புகளின் தரம் முதலிய அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்ட 20 நபர்கள்
பெருந்தன்மையுடனும் உண்மையான விக்கியுணர்வு மற்றும் போட்டியுணர்வுடனும் தமிழ் விக்கிப்பீடியர்களையும் இப்பயிற்சியில் பங்கு பெற அழைப்பு விடுத்திருக்கும் பஞ்சாபி மொழி விக்கிப்பீடியர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக நன்றி நவில்கிறோம். உங்கள் கருத்துகளைக் கீழே பதியலாம்.