முதலாம் ஔவையார்

சேரசோழபாண்டியர், மழவர் கோமான் அதியமான் நெடுமான் அஞ்சி, முல்லைக்கு தேரீந்த பாரி வள்ளல், காஞ்சித் தொண்டைமான். மலையமான் திருமுடிக்காரி, நாஞ்சில் கோமான் வள்ளுவன் போன்ற தமிழகத்தை ஆண்ட கடைச் சங்க கால மன்னர்களை ஔவையார் தமிழால் ஆண்டார் என்றால் மிகையாகாது. இவரின் நண்பனும் பெரும் வீரனுமாகிய தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி மீது படையெடுக்கும் பொருட்டு,சேரசோழபாண்டியரும் பிற குறுநில மன்னரும் மாநாடு கூட்டித் திட்டங்கள் வகுத்த போது, அங்கு வந்த ஔவையார் கூடியிருந்த மன்னர்களுக்கு பின்வரும் பாடல் மூலமாக, அறமற்ற இப்படையெடுப்பால் அழிவு அதியமானுக்கு அல்ல, கூடியிருக்கும் மன்னர்களுக்குத்தான் என்பதை கூறி இப்படையெடுப்பை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள, கூடியிருந்த மன்னர்களும் இவரின் சொல்லுக்கு மதிப்பளித்து இதற்கு இசைந்தனர். அப்பாடலைக் கீழே காட்டுதும்:-

திணை:- தும்பை துறை:- தானைமறம்
களம்புகல் ஓம்புமின் தெவ்விர்!
போர்எதிர்ந்துஎம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே. (புறநானூறு 87)


யாழ்

எழுதியவர் : (13-Nov-18, 6:08 am)
பார்வை : 18

மேலே