ஔவைக் குழந்தை வெண்பா

பகவன் என்பவனுக்கும் ஆதி என்பவளுக்கும் எழாவது குழந்தையாக பாணரகத்தில் பிறந்ததாகவும், அங்கே பாணரோடு செய்த உடன்படிக்கையின்படி, குழந்தையை அங்கேயே விட்டுவருமாறு பகவன் கூற, பெற்ற குழந்தையை பிரிய விரும்பாத ஆதி அழுததாகவும், ஆதிக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு ஔவைக் குழந்தை வெண்பா கூறியதாகவும் கூறுவர். அவ்வெண்பாவை கிழே காட்டுதும்:-


இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றேழுதி

விட்டசிவ நும்செத்து விட்டனோ-முட்டமுட்டப்

பஞ்சமே யானாலும் பாரம் அவ னுக்கன்னாய்

நெஞ்சமே யஞ்சாதே நீ.






யாழ்

எழுதியவர் : (13-Nov-18, 5:40 am)
பார்வை : 20

மேலே