நீ மட்டும்...
நீ மட்டும் விதிவிலக்கு...
அன்பே...
நீ மட்டும் விதிவிலக்கு...
எவள் எவளோ இசைத்துப் போக...
பாடுகிற பண் மறந்து...
புண் பட்டது புல்லாங்குழல்...!!!
உன் மூச்சுக் காற்று பட்டபோதுதான்...
முக்தி பெற்றது அந்த மூங்கில் குழல்...!!!
எவள் எவளோ பறிக்கப் போக...
ரோஜாவுக்கு முற்கள் முளைத்ததது ...
நீ பறிக்கையில் மட்டும் ஏனோ...
முற்கள் உதிர்த்து அழகாய்ச் சிரிக்கிது...
உன் பாதம் பட்ட போதுதான்...
அதிகாலை அருகம் புல்லுக்கு...
தலைக்கணப் பனித்துளி உடைந்து போனது...
ஆமாம்... ஆமாம்...
நீ மட்டும் விதி விலக்கு
என் அன்பே ...
ஆண்டவன் படைப்பில்....
நீ மட்டும் விதிவிலக்கு...

