காற்றின் நேசம்

மரக்கிளையில் இலையோடு பேசுகிறாய்
பூக்களின் இதழோடு பாடுகிறாய்
புல்வெளி குடும்பங்களில் உறவாடுகிறாய்
என்னிடம் மட்டும் ஏன் பேச மறுக்கிறாய்

உன்னுடன் தலையாட்ட நான் இலையாக மாறவேண்டும்
உன்னிடம் மொழிபேச புல்லாங்குழலாக எனக்கு வரம் வேண்டும்
எனக்கு வியர்த்த போது நீ வீசிவிட்டாய்
உனக்கு வியர்த்தால் என்னாவது நான்

தன்மானம் இழக்கிறேன் தவம்களைந்து குளிக்கிறேன்
நீ தானே என்னை தொட்டாய் ஒப்புக்கொள் எந்தன் முன் வந்து அப்படியாவது உன்னை காண்கிறேன்
இரட்டை தென்னைகளுக்கு இடையில் பரட்டை தலைவிரித்து வந்தாய்
மொட்டை மாடியின் மடியில் மெத்தை விரித்து சாய்ந்தாய்
அத்தை மகளென அள்ளித் தழுவ வந்தேன் சற்று இருங்க என்று சிலிர்த்து விட்டு சென்றாய்

நீ ஏறிவர தடைகள் ஒன்றும் இல்லை
நீ ஓடிவர உனக்கென்று தனி வழிகள் ஏதும் இல்லை
உனக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லை
இருந்தும் தினம்தோறும் என் வாசல் வந்து நிற்கிறாய்
உறவு ஒன்றும் இல்லை என்ற போதிலும்
நீ என்னை வந்து உரசுவது ஏன்

நான் கடந்து வந்த பாதையில்
நீ நடந்து வந்து சேர்ந்தாய்
நான் திரும்பி போகும் வேளையில்
என்னை விரும்பி வந்து சேர்ந்தாய்

பின்புதான் உணர்ந்தேன் நான் உன்னை சுவாசிப்பதால்
நீ என்னை நேசிக்கிறாய் என்று

க.அப்துல் பாக்கி

எழுதியவர் : (22-Nov-18, 1:40 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : kaatrin nesam
பார்வை : 48

மேலே