அவள் பார்வை

போரில், வாள்முனையில்
மகுடங்கள் மாறின
ராஜ்ஜியங்கள் மாறின
பெண்ணே, உன் பார்வையாம்
வாள்முனையில் என்
ஆண் என்னும் அகம்பாவத்தை
ஒரு நொடியில் தோற்கடித்தாய்
என்னுள்ளத்தை சிறைபிடித்தாய்
என்னையும் சேர்த்து
நான் உந்தன் காதலனானேன்
உன் அழகிற்கும் பார்வைக்கும்
என்னை இழந்து உன்னை சரணடைந்து
உன் பார்வையால் என்னை வென்றாய்
பார்வையாம் வாள்முனையில்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Nov-18, 1:42 pm)
Tanglish : aval parvai
பார்வை : 532

மேலே