விழிநீர் பயணம்
விழியிரண்டில் கொலுவிருந்த
உன் பின்னே மறைந்து நின்ற
நான் அறியா விழிநீர் ஊற்று!
நீ நகர்ந்த பின்னே
நான் அறிய பெருக்கெடுத்து
கண்ண வழி வழிந்து
என் நெஞ்சை கொஞ்சம்
கழுவிட நினைத்து தோற்றுப்
போனது
வற்றியதோ ஊற்று தெரியாது
நின்றுப் போனது விழி நீர்
பயணம்
நினைவுகளை சற்று கிளர
முனுக்கென்றே
எட்டிப்பார்த்த விழிநீர் நான்
வற்றவில்லை என
நீ மட்டுமே தந்த பரிசு எனக்கு நினைவூட்டியது
விழிநீரோட்ட தடம் மட்டும்
நந்நீரால் கலைந்துவிட
நின் நினைவுகளை நான்
எந்நீர் கொண்டு கரைப்பது?