மறுவாழ்வு அளித்திடுக

----------------------------------------
புயலொன்று தாக்கியது
புதைந்தது வாழ்வங்கு
புண்ணானது உள்ளமும் !
கண்டதும் காட்சிகளை
கணநேரம் நின்றது
துடித்திடும் நெஞ்சமும் !
வன்முறை கட்டவிழ்த்த
இதயமிலா இயற்கையது
செய்ததும் கொடுமையது !
வழியின்றித் தவித்திடும்
வாழ்விழந்த மக்களால்
வழிந்தது விழிகளும் !
ஓட்டுக்காக ஓடுவோரே
ஒருநொடி சிந்திப்பீர்
ஒருமுறை சென்றிடுக !
உங்களால் அவர்களில்லை
அவர்களால் நீங்கள்தான்
உணர்ந்து உதவிடுக !
நேசமுள்ள நெஞ்சங்களே
பாசமுள்ள உறவுகளே
உதவிக்கரம் நீட்டிடுக !
சாதிமதம் பார்க்காதீர்
சமயமிது கைக்கோர்க்க
தவிப்போரைக் கரைசேர்க்க !
கட்சிகளை மறந்திடுக
விரைவாய் பறந்திடுக
மறுவாழ்வு அளித்திடுக !
பழனி குமார்
22.11.2018