ஊஞ்சல் ஆடிடும் புயலே
ஊஞ்சல் ஆடிடும் புயலே
முத்துச் சரமே
மூவேந்தர் மரபிலே தோன்றிய
பெண் எனும் புலியே
வார்த்தைகளால் வர்ணித்து
வஞ்சகம் செய்ந்திடுவர்
வானின் மேகத்தை வாங்கி
வான் மழையாக பொழிந்துவிடு
கயவர்களின் மத்தியிலே
காட்டாறாக மாறிவிடு
மலைகளை தகர்தெறிந்து
மடமடவென முன்னேறிவிடு
அடிமையாய் இருந்தது போதும்
ஆர்த்தெழுந்திடு பகலவனாய்
நாட்டையும் வீட்டையும்
இரு கணகளாக காத்திடு!!!!