பசியில் குளித்த வெட்கம்
வேலை தேடிட இன்றும்
வெடித்து கிடந்த நாளில்
பயணித்த மனம்.
நம்பித்தட்டிய கதவுகளில்
முளைத்த கோரைப்பற்கள்.
பசித்த வயிற்றை
நிரப்பிய கண்ணீர்.
உணர்வில் தீ பொழிந்து
ரசிக்கும் துயரம்.
உயிர் கொடுத்து
உயிர் எடுக்கும்
நம்பிக்கைகள்...
வெட்டிவெட்டி சாயும்
கருப்பு பொழுதுகள்.
அத்தனையும் மறந்து
அறைக்குள் புகுந்து
துயில் தேடும் மனதை
விடாது விரட்டும்
தேள் கொடுக்காய்...
பக்கத்து அறையில் கேட்கும்
நேற்று மணமுடித்தவளின்
விரச ஒலிகள்...