காத்திருப்பு

இப்போதெல்லாம்
செய்தித்தாள் போடுபவன்
மணி அடித்து பேப்பர் எனச் சொல்லுவதில்லை எனினும்
காதுகளை தீட்டி காத்திருக்கின்றேன்.
'சளார்' என விழும் சத்தத்திற்காக.....

காலைப் பொழுதின்
முதல் வேலையாய்....
செய்தித்தாள் வழி - உலக
இயக்கம் பார்த்தபின்தான்
என்னியக்கம் உயிர் பெறும் காத்திருக்கிறேன் தவிப்போடு
காதலைச் சொல்ல காத்திருக்கும்
காதலன் போல்......

இன்னும் வரவில்லை......
மனைவி கொடுத்த 'காபி' கூட
பேப்பர் விரிக்காமல்
ருசிக்கவில்லை
காத்திருக்கிறேன்
காத்திருத்தலே வாழ்வின் சுகம்
என்பது போல்.....

எழுதியவர் : முகில் (23-Nov-18, 6:19 am)
சேர்த்தது : முகில்
Tanglish : kaathiruppu
பார்வை : 214

மேலே