கட்டழகி பெற்றவளே

எனைப் பார்த்து இனிதாக மணம் வீசும் பூவே
உனைக் காண தனியாக காத்திருக்கேன் நானே
துணைக் கொள்ள வருவாயோ துணிவான மானே
அரிதான நிகழ்வாக இது அமையட்டும் தேனே

பச்சரிசி பல்லாலே பால் வார்த்தை சொன்னவளே
அச்சு வெல்லம் போலே நீ அழகாக நின்னவளே
பிச்சு பிச்சு பேசும் தமிழால் பேதையாகி போனேனடி
சின்ன இடை கொண்டவளே வெண்ணை நிற பேரழகி

கன்னி உன்னைக் காணும் போது கள்ளின் போதை ஏறுதடி
கட்டழகி பெற்றவளோ கல்லால் சிலை ஆனவளோ
அந்தி நேரம் வந்து விட்டால் ஐம்புலனும் ஆடுதடி
அணைத்து ஒரு முத்தம் தந்தால் அனைத்தும் அடங்கி போகுமடி.
நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Nov-18, 2:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : kattazagi petravale
பார்வை : 388

மேலே