விற்பனை கடவுள்

முயற்சி திரு விநாயகரே
முழு முதற் கடவுளே
முச்சந்தி நாயகனே
முக்கண்ணன் மகனே
மனதில் நிறைந்தவனே
உனக்கு வண்ண சாயமேற்றி எண்ணத்தில் வைத்து
உன்னை விருந்தாளியாக்கி உபசரணை,ஆராதனை அநாதையாக்கி பின்
அவசரமாக வழியனுப்பி
இல்லத்தில் இல்லாமல் செய்தே கடலிலோ, ஆற்றிலோ கரைத்து கடமையாற்றி கரையேறுகின்றனர் களிமண்ணாய் உனை காட்சி பொருளாக்கி உண்மையை உரைத்திடு நீ
நீக்கமற நிறைந்தவனா
விற்பனை கடவுளா???