கஜா ஒரு குறுக்குவெட்டுபார்வை

தட்டுத்தடுமாறிய காற்றில்
மொட்டுக்கள் கிழிந்தன இரவு.
ஒற்றை விரல் சுட்டியதால்
நாடாள வந்த பட்டு வேட்டியிடம்
பத்து விரல் நீட்டி
பிச்சைக்கு பரிதவிக்கும்
பச்சைக்குழந்தைகருகில்
நீரில் வெந்த ஓலைக்குடிசையும்
ஆட்டின் பிணங்களும்...
வாக்களிக்க மட்டுமே
க்ளோனிங் ஆனதொரு கூட்டம்...
ரோடெங்கும் சிதறிப்பதறி
இளங்கூழுக்கு குமுறிஅழ,
நாடெங்கும் கிளர்ந்து வரும்
நட்புப்பார்வையில் ஈரம் மிளிர
வாகாய் நீளும் உதவிக்கரம்...
அக்கரத்தில் மறைந்திருந்த
கருப்பு காகிதத்தை
ஒவ்வொரு தவணையிலும்
சலவை செய்யும் புயல்கள்...
வந்த உதவியில் மகிழ்ந்து
வெந்ததை தின்று விதி பேசி
புதிய குடிசையில் புகுந்து
நம்பி நம்பிச்சாகும்
வாக்கு ரோபோக்கள்...

எழுதியவர் : ஸ்பரிசன் (25-Nov-18, 4:21 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 60

மேலே