என் நாடு

இறைவன் இயற்றிய இதிகாசம்
இந்தியா -பல
இனத்துப் பிள்ளைகளைப் பெற்ற
தாயடா!
இந்தியாவில் இருப்பதற்கு
எவர்க்கும் தடையில்லை-
இங்கு
இருப்பவர் சிலர் உடுத்த
உடையில்லை!
இந்தியாவில் உணவிற்கு
பலருக்குப் பஞ்சம்-
ஆனால்
இங்கு ஒழிவதே இல்லை லஞ்சம்!
இந்தியரின் கையிருப்பே
விவசாயம்-
அதுவும்
இனி அதுவும் விரைவிலாகும்
வெறுமாயம்!
எம்மை காப்பது போல பலரின்
நாயம்-
அதெல்லாம்
எம்முகத்தில் பூசும் கரி சாயம்!

எழுதியவர் : பும்பா! (25-Nov-18, 7:51 pm)
சேர்த்தது : ANBU SELVAN
Tanglish : en naadu
பார்வை : 65

மேலே