நம்பிக்கையற்ற மனிதர்களால்

என் வீட்டு மேசையை
அடிக்கடி சுத்தம் செய்கிறேன்
அழுக்கடைந்த மனதைப் போல்
நிரம்பிவிடுகிறது குப்பையால்

திரவம் நிரம்பிய கோப்பை
மேசையின் விளிம்பில்
விழுந்து உடைந்து விடுமோ
விபரிதமான நம்பிக்கை

அம்மாவிடம் அடிக்கடி
திட்டு வாங்குகிறேன்
அர்த்தமற்ற பயம்
அடிக்கடி ஏன் இப்படி

நம்பிக்கையற்ற மனிதர்களால்.....

எழுதியவர் : உமாபாரதி (25-Nov-18, 8:44 pm)
பார்வை : 928

மேலே