எனக்கான அந்த நொடிகள்
கலங்கிய கண்கள் உன்னை எதிநோக்க
காத்திருக்க நேரமின்றி - விழிகள்
உந்தன் வருகைக்காக ஏங்கியிருக்க
கலக்கமே உருவாக வீற்றிருந்தேன்.
காலங்கள் தோறும் எழுதாத ஓவியம்
கண்ணீரால் நான் எழுதுகிறேன்
காவியங்கள் எழுத மறந்த காதலை
மனச்சிறையில் அடைந்திட்டேன்
மனக்கதவை திறந்து நீயும் வரவே
இமைக்காமல் உன்னை பார்த்து களித்தேன்
நொடிப்பொழுதும் உன்னை இழக்க நினைக்கவில்லை
உன்னோடு வாழ அத்துணை ஆசையடி
இருகை இணைந்திட இருவிழி இணைந்திட
இருவுயிர் இணைந்திடாதோ
இருமனம் இணைந்திட்டும்
ஒருநொடி சேர்ந்திட்டால் ஒருயுகம் வாழ்வேனேடி
பதித்த என்கண்கள் படபடக்க
கைகள் கோர்த்துக்கொண்டு உளமகிழ
இந்நொடி நிலைக்காதோஇறைவா
அத்துணை தெய்வத்திற்கும் வேண்டியது என்மனது
வார்த்தைகளின்றி கண்களால் பேசிக்கொண்ட தருணம்
நானும் எனது தாய்மொழியும் ஊமை ஆயினோம்
வாய்மொழி மறந்து மனமொழி பேசிக்கொண்டேன்
அம்மொழியும் சற்றே மௌனம் காத்தது.
தழுவிய என்கைகளை விட்டுவிடாதே என இறுக்க பிடிக்க
கைகளில் போராட்டம் மனப்போராட்டத்தின் வெளிப்பாடோ
சற்றே கைகள் நழுவிட கண்கள் போராட துடித்தது
கணைகள் பல தொடுத்து களவாட துடித்தது
தேவதை உனது கலைகளை விடுவிக்க மனமில்லை
என்னிரு கைகளால் உன்கைப்பற்றி நெஞ்சோடு அனைத்திட்டேன்
துடிக்கும் ஒரு இதயம் உனக்காக தான் என்று
ஒவ்வொரு துடிப்பிலும் தூது அனுப்பினேன்
முடமாகிப்போன நொடிகளின்று மின்னல் வேகத்தில் பயணிக்க
இறைவன் உனக்காக ஒதுக்கிட்ட நொடிகளை ஓடி மறைந்தன
பிரிய மனமில்லை , பிரியாமல் வழியும் இல்லை
நீர்பெருக நேரமின்றி விழிகளால் விடைகொடுத்தேன்
இனியொரு வாய்ப்பு கிடைக்கப்போவது இல்லை
கிடைத்தால் உனை விடப்போவதும் இல்லை
கடந்துபோன நொடிகளில் உன்னுடன் வாழ்ந்த இந்நினைவு
ஆயுள் வரை தித்திக்கும் என் செல்லம்மா
நொடிகளில் வாழ்ந்த நான்
இனி அந்நொடிகளைத்தாங்கி
நொடி நொடியும் வாழ்வேனேடி
எனக்கான அந்த நொடிகள் என்றும் சுகமானது...!