என் தாயுமானவளே

சீவிச் சிங்காரித்துச்
சின்னவட்டப் பொட்டிட்டு
மேவியுச்சி மோந்து
வாவென்ற வருகணைந்து
தாவியெனை யணைக்கும்
என் தாயுமானவளே!
ஆவி சோர்கையில்வந்து
அவி சொரிந்திவ்வாயில்,
போவியோ? அன்றேல்
ஏவியவோர் சொல்கேட்டுச்
சாவிதரு பொம்மையதாய்
ஆவியோ? அறிகிலேன் யான்..!
~ தமிழ்க்கிழவி.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (27-Nov-18, 10:21 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 134

மேலே