வீடு
இந்தச் சதுரங்களில்
எப்போதும் நான்
வீடென்று கூறிக்கொண்டு.
பளபளத்த சுவரெங்கும்
ஒரே நிறம் ஒரே நிறம்.
மழையும் வெய்யிலும்
நனைய நனைய எரிக்கும்
கீஸுகீஸென்ற அக்குருவிகளின்
நிழல் பட்ட இக்கவிதைகுறிப்பு
இச்சுவரில் ஒட்டவேயில்லை.
விளக்கின் ஒளி உடைத்த
எனது நிழல்கள் அலைகிறது
அச்சுவரெல்லாம் எளிதாக.
சதுரத்தில் குமுறுகின்றது
பாஷைகளும் மூச்சொலிகளும்...
பூக்களும் பறவைகளும் நில்லாது
வழிந்து விழும் சுவர்தான்
வாசலில் குறிக்கிறது
நான் யாரென்று அவனுக்கு
திமிரொன்று குபுகுபுக்க...