சர்க்கரை நோய்க்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்
உலகில் பெரும்பாலானோர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது சர்க்கரை நோயினால் தான். முன்னர் 50 வயதிற்கு மேற்பட்டோர்க்கு வந்த சர்க்கரை நோய் தற்போது பிறக்கும் குழந்தைக்கும் கூட வருகிறது.
சிறுக சிறுக பாதிப்பினை உண்டாக்கும் நோயினை கவனித்து முறையாக சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் உயிரை கூட பறித்து விடும்.
உடலில் இன்சுலின் சுரக்காவிட்டாலோ அல்லது இன்சுலின் சுரப்பு போதுமானதாக இல்லாவிட்டால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
அதீத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, திடீரென உடல் எடை குறைதல் போன்றவை இருந்தால் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
சரியான நேரத்தில் அதிகமான அளவு உணவு எடுத்து கொண்டாலும் பசி எடுப்பது போன்ற உணர்வு இருந்தால் அதுவும் சர்க்கரை நோய்க்கான அறிகுறியாகும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்
கிழங்கு வகைகள்
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவை உடலுக்கு ஆரோக்கியதை தந்தாலும் அதனை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் பலபிரச்சனைகளை சந்திக்க கூடும்.
இறைச்சி
ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு போன்ற இறைச்சி வகைகள் அதிகமாக உட்கொள்ளும் போது அவை உடலில் கெட்ட கொழுப்பை தேங்க வைத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
கஞ்சி
தினமும் கஞ்சி குடித்து வருவது உடலுக்கு மிகவும் நல்லது தான். இருந்தாலும் கஞ்சி என்றால் சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகம் அதிகமாகிவிடும். அதை கட்டாயமாக தவிர்க்கவும்.
எண்ணெய் வகைகள்
தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றி சமைத்த திண்பண்டங்கள் மற்றும் உணவுகள் போன்ற அதிக எண்ணெய் வகைகளைஉணவில் சேர்த்து கொள்ள்வதை தவிர்த்து விடுங்கள்.
பிரெட்
வெள்ளைநிறத்தில் உள்ளவை யாவும், டயாபடிஸ்காரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். வெள்ளை பிரெட்டில் உள்ள குளுக்கோஸ், சர்க்கரையளவை, மோசமாக்கிவிடும்.
துரித உணவுகள்
ப்ரைடு ரைஸ், ஃப்ரைடு நூடுல்ஸ் போன்ற மசாலா நிறைந்த சீன உணவுகளில் அதிக கொழுப்பு, அதிக கார்ப், அதிக சோடியம் மற்றும் அதிக கலோரி இருப்பதால், சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு, இவை அதிக ஆபத்தை விளைவிக்கும்.
பால் வகைகள்
இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்தவை. எருமை பால், வெண்ணெய், வணஸ்பதி இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.