படைப்பின் இரகசியம்...

எதார்த்த மீறல்
இருப்பினும்
என் கற்பனையின்
முதலும் கடைசியுமான
இரசிகன்
நான் தான்...!

நிலா உதித்த இரவொன்றில்
விண்மீன் கூட்டங்களினூடே
பயணிக்கையில்
புள்ளியாய்த் தோன்றும்
பூமியும்
ஆதியந்தமிலா
பிரபஞ்சமும்
என் மூளையின்
ஏதோ ஒரு செல்லில்
புதைந்திருந்த
வினாவிற்கு
விடையாய்
மனித வாழ்வு அநித்தியமானது
என்பதைப் பறைசாற்றின..!

படைப்பின்
இரகசியம் பற்றிய
சூட்சுமங்களின் தேடலே
இவ்வாழ்வின் வரையறை
என்றுணர்ந்த பின்
ஒரு கனம் கூட
வாழ விரும்பவில்லை..
படைப்பின் இரகசியமே
இதுதானோ....?!

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (24-Aug-11, 2:46 pm)
பார்வை : 733

மேலே