கவிதைகள் கதறுகின்றன...

மீண்டும் கவிதை வரையத் தொடங்கிய
நேற்றில் இருந்தே முரண்படுகின்றன
கவிதைகள் என்னோடு.

பல வருடங்கள் கழித்து
நான் அவைகளைத் தொடுவதனால
எப்போது தொட்டாலும்
என் மனம் புணர்வதற்கு
எதுவாய் இருப்பது தானே
கவிதையின் இயல்பு
ஆதலால் அப்படி இருக்கு
வாய்ப்புகள் ஏதும் இல்லை...

இருந்த போதும்
அவை என்னோடு
முரண்படுகின்றன..
என்னைப் பார்த்து
சிரிக்க மறுக்கின்றன.

என்மனமோடு புணர்ந்த
பலகவிதைகள்
இப்போது தன்னைப் பார்த்துக் கூட
புன்னகைப்பதில்லை என்று
நேற்றிரவு தூங்கும் போதும்
மனைவி சொன்னாள்..
பிற்குறிப்பாக ஒன்று சொன்னாள்
எல்லாம் சனல்4 படத்தின் பின் தான் என்று...
அப்போது நமட்டுச் சிரிப்பு சிரித்தது
ஒரு கவிதை

காலையில்
கவிதையின் நமட்டுச் சிரிப்புடன்
வன்புணர்ச்சி வக்கிர செயல்
என்றாள் மனைவி...
இருந்த போதும்
என்னால் புணர்வதை நிறுத்த முடியவில்லை
கவிதைகள் கதறுகின்றன
நான் கவிஞனாக மட்டும் இருப்பதால்.

எழுதியவர் : அதீஸ் (23-Aug-11, 6:41 pm)
சேர்த்தது : adhees21
பார்வை : 454

மேலே